புதிய வரிச்சட்டமூலம் பல நிவாரணங்களை இல்லாமல் செய்துள்ளது – பந்துல

249 0
நடைமுறையில் உள்ள தேசிய வரி சட்டமூலத்தில் உள்ள நிவாரணம், புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தில் குறைக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வரிச்சட்டமூலம் பல நிவாரணங்களை இல்லாமல் செய்துள்ளது.
முன்னர் 44 பக்கங்களில் இருந்த பொருட்களுக்கான வரிவிலக்கு தற்போது 2 பக்கங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சட்டமூலம் அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment