கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம்

265 0

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் இன்றுடன் நூற்றி தொண்ணூற்றிஇரண்டாவது நாளாக   இடம்பெற்றுவரும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் ஊர்வலமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செலக முன்றலில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள், தமது உறவுகள் தொடர்பில் தீர்க்கமான பதில் வழங்கப்பட வேண்டும் ஜனாதிபதியின் வாக்குறுதியும் பொய்யானது  என்று பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப் போராட்டத்தில் காணமல் போனவர்களின் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா  எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment