சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றுள்ளது.
‘சிந்துவதற்கு கண்ணீர் இல்லை, பிள்ளைகளை உடன் விடுதலை செய்யுங்கள்’, ‘காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணையை விரைவுபடுத்துங்கள்’, ‘தடுத்து வைத்துள்ள எங்கள் உறவுகளை விடுதலை செய்யுங்கள்’ போன்ற பாதாதைகளை தாங்கியவாறு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.