இந்தியாவின் 70-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுதந்திர தின விழா பேருரையாற்றினார்.
இந்தியாவின் 70-வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதேபோல் மாநில தலைநகரங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தேசிய கொடியை ஏற்றினார்கள்.
அவ்வகையில், தமிழக அரசின் சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று நாட்டின் 70-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழாவில் பங்கேற்க இன்று காலை சுமார் 9 மணியளவில் மாநில தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
தமிழக காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அப்போது ஜெயலலிதா குறிப்பிட்டார்.
நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்கு மகத்தானது. விடுதலைக்கான வேட்கையை தட்டி எழுப்பியவர் வாஞ்சிநாதன் என்று தனது துவக்க உரையில் குறிப்பிட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து சிறப்புரையாற்றி வருகிறார்.