அமெரிக்கா: ஹார்வே புயலால் வேதிப்பொருள் தொழிற்சாலை வெடிக்கும் அபாயம்

301 0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை மூழ்கடித்துள்ள ஹார்வே புயல் காரணமான அங்குள்ள வேதிப்பொருள் தொழிற்சாலை வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை ‘ஹார்வே’ புயல் ருத்ர தாண்டவமாடி விட்டது. அந்த நாட்டின் நான்காவது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ள ஹூஸ்டன் நகரம், வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இந்த நகரத்தில் மட்டுமே புயல், வெள்ளத்தில் சிக்கி நேற்றைய நிலவரப்படி இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஹூஸ்டனின் அருகே உள்ள க்ராஸ்பை என்ற இடத்தில் வேதிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் மின்சாதன அறைகளில் வெள்ளநீர் புகுந்துவிட்டதால் வேதிப்பொருட்களை குளிர்நிலையில் வைத்திருக்கும் எந்திரங்கள் வேலை செய்யவில்லை.

இதனால், எப்போது வேண்டுமானாலும் தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்படும் அபாயம் என்ற நிலை உள்ளது. இதனையடுத்து, அந்நகரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளநீரை வெளியேற்றி விட்டு மாற்று ஏற்பாடுகள் மூலம் மின்சாதனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment