கல்பிட்டி – முகத்துவாரம் பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலில் ஒருதொகை மின் உபகரணங்களை கொள்ளையிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொள்ளையிட்ட பொருட்களின் பெறுமதி நான்கு இலட்சம் ரூபா என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கைதானவர்கள் கல்பிடி பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 29 வயது மதிக்கத்தக்கவர்கள் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்பிடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.