உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 52 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த அரிசி உள்நாட்டு சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் இருந்து உடனடி தேவைக்கான அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது