இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பம்

381 0

பிராந்­திய இந்து சமுத்­திர மாநாடு நாளை வியா­ழக்­கி­ழமை அலரி மாளி­கையில் ஆரம்­ப­மாக உள்­ளது.  இந்த மாநாட்டில் கலந்­து­கொள்ள  இந்­தியா , அமெ­ரிக்கா மற் றும் அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட 17 நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்­கைக்கு விஜயம் செய்ய உள்­ள­தாக சட்ட ஒழுங்­குகள் அமைச்சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்­தார்.

அந்­த­வ­கையில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தெற்கு , மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்க பதில் இரா­ஜாங்க செய­லாளர் ஹெலிஸ் வேல்ஸ் உள்­ளிட்­ட­வர்கள் இன்று இலங்­கைக்கு விஜயம் செய்ய உள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

இந்து சமுத்­திர மாநாடு தொடர்பில் நேற்று செவ்­வாய்­கி­ழமை அலரி மாளி­கையில் இடம்­பெற்ற ஊடக சந்­திப்பின் போதே வெளி­வி­வ­கார அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது உரை­யாற்­றிய சட்ட ஒழுங்­குகள் அமைச்சர் சாகல ரத்­நா­யக்க கூறு­கையில் ,

டில்­லியைத் தள­மாகக் கொண்டு செயற்­படும் இந்­திய மன்­றத்தின் ஏற்­பாட்டில்  இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாடு நாளை வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மாக உள்­ளது. அலரி மாளி­கையில் நடை­பெ­ற­வுள்ள இந்த மாநாட்டில் இந்­தியா , அமெ­ரிக்கா மற்றும் அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட 17 நாடு­களின் பிர­தி­நி­திகள்  பங்­குப்­பற்ற உள்­ளனர்.

2016 ஆம் ஆண்டு சிங்­கப்­பூரில் இடம்­பெற்ற இந்து சமுத்­திர மாநாட்டை   பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மைத்­தாங்கி நடத்தி வைத்தார். இம் முறை இலங்­கையில் நடாத்­து­வ­தற்கு இந்த வாய்ப்பு கிடைத்­தமை முக்­கி­ய­மா­ன­தாகும். இந்து சமுத்­திர பொரு­ளா­தா­ரத்­திற்கு மற்றும் அல்ல உலக பொரு­ளா­தா­ரத்தில் இந்து சமுத்­தி­ரத்தின் முக்­கி­யத்தும் தொடர்பில் கருத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்து சமுத்­தி­ரத்தின் முக்­கிய மையப்­ப­கு­தியில் இலங்கை உள்­ள­மை­யினால் வல­யத்தில் பாது­காப்பு மற்றும் நிலை­யான அமைதி என்­ப­வற்றில் எமக்கும் பொறுப்­புகள் உள்­ளன. குறிப்­பாக  இலங்­கையின் உள்­நாட்டு போர் முடி­வ­டைந்­துள்­ள­மை­யினால் ஆயுத கடத்­தல்­க­ளுக்கு வாய்ப்­பில்லை. ஆனால்  பிராந்­தி­யத்­திற்குள் ஆயுத கடத்தல் காணப்­ப­டு­கின்­றது .இலங்­கையை பொறுத்த வரையில் போதைப்­பொருள் கடத்தல் குறித்தே கூடிய கவனம் செலுத்­தப்­பட வேண்­டி­ய­துள்­ளது. மாநாட்டில் இலங்கை இந்த விட­யத்தில் கூடிய கவனம் செலுத்தும்.

இதில் பங்­கேற்­ப­தற்­காக இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் , மத்­திய ரெயில்வே அமைச்சர் ஸ்ரீ சுரேஷ் பாபு மற்றும் வெளி­வு­றவு செய­லளர் எஸ். ஜெய­சங்கர் உள்­ளிட்­ட­வர்கள் இன்று இலங்­கைக்கு  வரு­கின்­றனர்.

அதே போன்று தெற்கு , மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்க பதில் இரா­ஜாங்க செய­லா­ளரும், ஆப்­கா­னிஸ்தான் மற்றும் பாகி­ஸ­தா­னுக்­கான விஷேட பிர­தி­நி­தி­யு­மான ஹெலிஸ் வேல்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்­வ­தற்­காக நாளை வியா­ழக்­கி­ழமை இலங்­கைக்கு  விஜயம் மேற்­கொள்ள உள்ளார்.

மேலும் சிஷெல்ஸ் துணை அதிபர் வின்சன்ட் மெரிட்டன், சிங்­கப்பூர் வெளி­வி­வ­கார அமைச்சர் விவியன் பால­கி­ருஷ்ணன், உள்­ளிட்ட 150 மேற்­பட்ட சர்­வ­தேச பிர­தி­நி­திகள் இலங்­கைக்கு மாநாட்டை முன்­னிட்டு இலங்­கைக்கு விஜயம் செய்ய உள்­ளனர்.

அத்­துடன் பங்­க­ளாதேஸ், ஜப்பான், நேபாளம், சிறி­லங்கா, மொறி­சியஸ், வியட்னாம், ஆகிய நாடு­களின் அமைச்­சர்கள் , அமெ­ரிக்கா, அவுஸ்­ரே­லியா, இந்­தியா, இலங்கை, பங்­க­ளாதேஸ், ஜேர்­மனி, கென்யா, தென்­கொ­ரியா, ஆப்­கா­னிஸ்தான் ஆகிய நாடு­களின் மூத்த அதி­கா­ரி­களும் இந்தக் கருத்­த­ரங்கில் பங்­கேற்­க­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்து சமுத்திர  பிராந்தியத்தின் அமைதி,  பாதுகாப்பு , அபிவிருத்தி  ஆகிய தொனிப் பொருள்களில் இந்த மாநாடு முன்னெடுக்கப்பட உள்ளது.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாநாட்டிற்கு தலைமைத்தாங்க உள்ளார். அதே போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது சிறப்புரை நிகழ்த்த உள்ளார்  என்றார்.

Leave a comment