முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்று 30 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 11 வரை வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்று 30 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் பாடசாலைகள் யாவும் இன்று மூடப்பட்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளது.கடந்த 18 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் யாவும் இரண்டாம் தவணைக்கென மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்த போதிலும் ஹஜ் ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் சமயக் கலாசார அமைச்சின் வேண்டுகோளுக்கமைய 30 ஆம் திகதிக்கு அவ் விடுமுறை பிற்போடப் பட்டது.