பொலிஸார் தற்பொழுது அணியும் சீருடையின் நிறத்தை அடுத்த வருடத்துக்குள் நீல நிறமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பொலிஸார் அணியும் காக்கி நிற ஆடைகள், பல்வேறு தொழிலாளர்களினாலும் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீல நிற ஆடையாக மாற்றுவதற்கான விலை மனுக் கோரல் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.