சசிகலா, தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்துள்ளார்.
சென்னை உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் முக்கிய நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1. சசிகலா, தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லுபடியற்றது
2. நமது எம்ஜிஆர், ஜெயா டிவி மீட்கப்படும்
3. செயற்குழுவும், பொதுக்குழுவும் உடனடியாக கூட்டப்பட வேண்டும்
4.சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் புதுவை சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இந்த கூட்டதிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.