இந்தியாவில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய பெண் தனக்கு அவர் மீது பயம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
குர்மீத்துக்கு எதிராக வாக்குமூலம் வழங்க 18 பெண்கள் தயார் படுத்தப்பட்டிருந்தாலும் இறுதியில் வாக்குமூலம் வழங்கிய 2 பெண்களினால் அவரிற்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைத்துள்ளது.
இந்தநிலையில் சாமியாரிற்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய பெண்களில் ஒருவர் ‘2009இல் முதன்முதலாக குர்மீத்துக்கு எதிராக தான் வாக்குமூலம் அளித்தபோது, அவர் நீதிமன்ற அறையில் இருந்தார்.
அப்போதும் அவரை பார்த்து எனக்கு பயம் இல்லை தற்போது எந்தவித பயமும் இல்லை.
2002ஆம் ஆண்டு முதல் நான் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்து வருகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.