ஜெர்மனியில் குறைந்தது 90 நோயாளர்களை கொலை செய்த ஆண் தாதி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நோயாளர்களுக்கு அளவுக்கதிகமான மருந்தை செலுத்தி, கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2015ஆம் ஆண்டு நீல்ஸ் ஹோகேல் என்பவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
எனினும் இவரது காண்காணிப்பில் இருந்து உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 120 பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில், 90 பேர் அளவுக்கதிகமாக மருந்து செலுத்தி கொலை செய்தமைக்கான் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை ஜேர்மனிய குடியரசின் வரலாற்றில் வித்தியாசமான ஒன்று எனவும் போருக்கு பின்னர் ஏற்பட்ட மிக மோசமான கொலை குற்றம் இது எனவும் தெரிவிக்கப்படுகிறது.