பொலித்தீன் பைகளுக்கு கென்யாவில் தடைக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி, தடையை மீறி பொலித்தீன் பைகளை கொண்டுச் செல்வோர், உற்பத்தி செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
தடைகளை மீறுவோறுக்கு எதிராக நான்கு வருட சிறை தண்டனை அல்லது 38 ஆயிரம் அமெரிக்க டொலர்கள், அதவாது இலங்கை ரூபாவின் மதிப்பின்படி 58 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் பொலித்தீன் பைகளின் தடையினால் 80 ஆயிரம் பேர் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு பொலித்தின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பத்து வருடங்களாக பொலித்தீன் பைகள் மீதான தடையை நடைமுறைப்படுத்த பல்வேறு பிரச்சினைகளை அந்நாட்டு அரசு முகங்கொடுத்ததாகவும் எனினும் இனி கண்டிப்புடன் குறித்த தடை அமுல் படுத்தப்படுவதாகவும் அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.