புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி வினாத்தாள் கசிவினை தடைசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினை தொடர்பாகக் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்துவதினூடாக வினாத்தாள் கசிவினை தடுக்க முடியுமா என்பதனை ஆராயுமாறு கல்வி அமைச்சு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
2017 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் போது இரசாயணவியல் பரீட்சைக்கான வினாத்தாள் வெளியானமையை தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு சட்டத்திற்கு அமையத் தண்டனை வழங்கப்படும் என்பதோடு மாணவர்களுக்கு நீதியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.