பாடசாலை கட்டிடம் ஒன்றில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு!

421 0

கம்பளை பிரதேசத்தில் பாடசாலை கட்டிடம் ஒன்றில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் கைவிடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் இருந்த இந்த சடலம், அழுகிய நிலையில் காணப்படுவதால் இனங்காண முடியாது உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழுத்து பகுதியில் வயர் ஒன்று கட்டப்பட்டு கூரையில் தொங்கவிடப்பட்ட நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை அந்த பிரதேசத்தில் 64 வயதான நபரொருவர் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பளை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a comment