இந்தியாவில் இலங்கையர்களின் அவல நிலை

367 0

sabrita_bogatiஇந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் மனிதத்தன்மையற்ற நிலையில் வாழ்வது குறித்து இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
கேரளாவின் வாயாநாட் மாவட்ட ஆட்சியர்  எச் பஞ்சபாகீசன் அண்மையில் கம்பாலா குடியிருப்புக்கு சென்ற நிலையில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்
இலங்கையில் இருந்து சென்ற இந்த அகதிகள், கேரளாவின் தேயிலை தோட்டங்களில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இங்குள்ள மக்களின் 94 வீடுகளுக்கு உரிய கழிப்பறை வசதிகள் இல்லை.
இதனைதவிர நீர் உட்பட்ட பல அடிப்படை வசதிகளில் பாரிய குறைப்பாடுகள் உள்ளன.
பல தொழிலாளர்கள் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் வசதிகள் எவையும் இவர்களுக்கு செய்துகொடுக்கப்படவில்லை.
இன்னமும் இவர்கள் தேயிலை தோட்டத்திலேயே பணியாற்றி வருகின்ற நிலையில் தமது பிள்ளைகளுக்கு உரிய பாடசாலை வசதிகளை கொண்டிருக்கவில்லை.
எனவே இந்த மக்கள் தமது பிள்ளைகளை தமிழகத்தில் கடலூருக்கே கல்விக்காக அனுப்புகின்றனர்.
ஆரம்ப கல்விக்காக இரண்டு கிலோமீற்றர் வரையான காட்டுப்பாதையில் செல்லவேண்டியுள்ளது
உயர்பாடசாலைக்காக 5 கிலோமீற்றர் வரை நடந்துசெல்ல வேண்டியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த இவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதாக கூறிய இந்திய அரசாங்கம் 3 தசாப்தங்கள் கடந்தும் அவர்களுக்கு உரிய வாழ்க்கையை பெற்றுத்தரவில்லை என்று தன்னார்வு அமைப்புக்களை கோடிட்டு தெ டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.