ஆசியாவின் ஆணழகனாக லூசியன் புஷ்பராஜ்!

297 0

ஆசியாவிலே ஆணழகனாக தமிழர் ஒருவர் தேர்வாகியுள்ளார். இது குறித்த போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜ் எனும் தமிழர் வெற்றியடைந்து இலங்கை வரலாற்றில் புதிய சாதனை ஒன்றைப் பதிந்துள்ளார்.

அதாவது ஆசியாவின் ஆணழகன் போட்டியில் பங்குபற்றி ”மிஸ்டர் ஆசியா” பட்டத்தினைப் பெற்ற முதல் இலங்கையராக புஸ்பராஜ் விளங்குகிறார்.

இந்த ஆணழகன் போட்டி தென் கொரியாவின் சோல் நகரில் 51ஆவது போட்டியாக நடந்துள்ளது. இந்த போட்டியில் பங்குபற்றிய லூசியன் புஷ்பராஜ் மிஸ்டர் ஏசியா (Mr.ASIA) மகுடத்தை வென்றுள்ளார்.

மிஸ்டர் ஏசியா போட்டி பட்டத்தை வென்றதுடன் முன்னதாக நடத்தப்பட்ட 100 கிலோ எடைப்பிரிவிலும் லூசியன் புஷ்பராஜ் வெற்றிப்பெற்றுள்ளார்.

ஆசிய ஆணழகர் போட்டிகளில் 26 நாடுகளைச் சேர்ந்த 350இற்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment