போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வந்த பாகிஸ்தான் பிரஜை கைது

297 0

போதை மருந்தை விழுங்கிக் கொண்டு இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க விமாான நிலைய பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

பின்னர் சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றிலிருந்து 21 போதை மாத்திரை வில்லைகள் மீட்கப்பட்டுள்ளன.

37 வயதுடைய பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், விமாான நிலைய பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment