மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

316 0

மாளிகாவத்தை ரூபி சினிமா தியேட்டருக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். 

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இருவரினதும் நிலமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment