கட்சியை உடைக்கும் ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை- மஹிந்த

277 0

கட்சியை உடைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின் நிற்க மாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வேறு கட்சிக்காக ஆட்சேர்க்கும் சு.க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற  கேள்விகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் நாம் அவ்வாறான முடிவு ஏதும் எடுக்கவில்லை. ஆனால் அவர்களை அகற்ற முடியும். . சுதந்திரமாக செயற்பட அவர்களுக்கு இடமளித்துள்ள நிலையில் அவர்கள் அதனை தவறாக பயன்படுத்துகின்றனர். வேறு கட்சி உருவாக்க முயல்கின்றனர். இவர்கள் தொடர்பில் முடிவு எடுக்க நேரிடும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment