
குறித்த யானையை பிடிப்பதற்கான முயற்சியில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நீண்ட நேரமாக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதிக்கு பொதுமக்களை செல்ல வேண்டாம் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தினரால் அறிவுறுத்தல் ஒலிபெருக்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. குறித்த யானையை பிடித்து பொருத்தமான பகுதிக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த பகுதிக்கு பா உ சுமந்திரன் அவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிட தக்கதாகும்.