வடகொரியா செலுத்திய ஏவுகணை ஒன்று கடலில் வீழ்வதற்கு முன்னதாக, கிழக்கு ஜப்பானுக்கு மேலாக பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஏவுகணையை சுட்டுவீழ்த்துவதற்கு ஜப்பான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறித்த ஏவுகணை கடலில் வீழ்வதற்கு முன்னதாக மூன்று பாகங்களாக முறிவடைந்ததாக கூறப்படுகிறது.
வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் இதுவே ஜப்பானுக்கு மேலாக வடகொரியாவின் ஏவுகணை ஒன்று பயணிக்கும் முதல் சந்தர்ப்பம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வடகொரியா மூன்று குறுந்தூர ஏவுகணைகளை கிழக்கு கடற்பரப்பில் செலுத்தி சோதனை செய்ததாக கூறப்படுகிறது.