தேசிய அரசாங்கத்தின் ஆயுள் காலம் டிசம்பருடன் முடிகிறது 

285 0

டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன கைச்சாத்திட்டுள்ள தேசிய அரசாங்கத்திற்காக ஒப்பந்தம் நிறைவு பெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் காலாவதியானதன் பின்னர், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதா? இல்லையா? என்பது குறித்து கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியானப் பின்னர், புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment