கொழும்பில் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு நாள் மாநாடாக இடம்பெறும் இந்த மாநாடு எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெறும் இந்த மாநாட்டில் 35 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குகொள்ள உள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சரைத் தவிர, சிசெல்ஸின் உப ஜனாதிபதி, இலங்கை பிரதமர், சிங்கபூர் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர் கலந்து கொள்ளும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேர உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.