கண்டி நகரில் டெங்கு நோய் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் பொலித்தீன் பைகளை கொண்டுச் செல்ல முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மத்திய மாகாணத்தின் சகல பாடசாலைகளிலும் வெள்ளிக்கிழமைகளில் ஒருமணி நேரம் சூழல் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனை பாடசாலையின் நேரசூசியில் இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.