இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை பிரயோஜனம் அற்றது – ஜேவிபி 

264 0

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை பிரயோஜனம் அற்றது என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

‘இலங்கையை அமெரிக்காவிற்கு கீழ்படியச் செய்யும் பாதுகாப்பு உடன்படிக்கை வேண்டாம்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் உரையாற்றிய ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த உடன்படிக்கையின் ஊடாக இலங்கை அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆனால் அதன் ஊடாக இலங்கைக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Leave a comment