மண்டைத்தீவு – சிறுத்தீவு வள்ளம் விபத்து – காரணம் கண்டறியப்பட்டது

326 0

யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு – சிறுத்தீவு கடற்பரப்பில் வள்ளம் விபத்திற்குள்ளானதில் உயிரிழந்த ஆறு பேரின் மரணத்துக்கு, அவர்கள் பயணித்த வள்ளம் உரிய தரத்துடன் இல்லாமையும், குறித்த மாணவர்கள் மதுபோதையில் இருந்தமையுமே காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

காவற்துறையினரின் ஆரம்ப விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்தமுறை உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 19-20 வயதுகளுக்கு இடைப்பட்ட 7 மாணவர்கள், பிறந்த நாளை கொண்டாடும் முகமாக குறித்த கடற்கரைப்பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.

இதன்போது அதிக மதுமயக்கத்தில் இருந்த அவர்கள் பின்னர் அங்கிருந்த பயணத்துக்கான தரத்தை கொண்டிராத வள்ளத்தில் ஏறி கடலுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 7 பேரில் ஒருவர் மாத்திரம் நீந்திக் கரைச் சேர்ந்தார்.

ஏனைய ஆறு பேரம் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment