காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலம் – ஹெல உறுமய வரவேற்பு

438 0

nishantha-sriwarnasinghe-400-seithyஇலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலக அமைப்பு சட்டத்தை கொண்டு காணாமல் போன ஆயிரக்கணக்கான படைவீரர்களின் நிலையை கண்டறிய முடியும் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
போர்க்காலத்தின் போது வடக்குகிழக்கில் ஆயிரக்கணக்கான படையினரும் காவல்துறையினரும் காணாமல் போயினர்.
போரின் போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டபோதும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் ஆணையிறவு ஆகிய முகாம்களில் இருந்து காணாமல் போன ஐயாயிரம் படைவீரர்களின் நிலையை கண்டறியமுடியவில்லை.
இந்தநிலையில் அவர்களின் நிலையை கண்டறிய குறித்த அலுவலகம் உதவும் என்றும் வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் விடுதலைப்புலிகளும் விசாரணை செய்யப்படக்கூடிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.