மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் 7 அரச நிறுவனங்களில் பாரிய அளவில் நிதி மோசடி,ஊழல்,அரச சொத்துக்களை துஸ்பிரயோகப்படுத்தியமை தொடர்பிலான விசாரணை அறிக்ககைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசுரியவிடம் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால்; பரிந்துரைக்கப்பட்ட 7 அறிக்கைகள் குறித்து சட்டநடவடிக்கைகள் எடுக்குமாறு ஜனாதிபதியினால் பணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள குறித்த 7 அறிக்கைகள் தொடர்பில் சட்ட ஆய்வுகள் நிறைவடைந்த பின்னர் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், ஸ்ரீலங்கன் கேட்டரின் நிறுவனம்,அம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கை போக்குவரத்து சபை உடரட்ட அபிவிருத்தி அதிகாரசபை நுகர்வோர் சேவைகள் அதிகாரசபை மற்றும் வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரகோனுக்கு எதிரான விசாரணை அறிக்கைகள் உள்ளிட்டவை ஜனாதிபதியினால் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.