சுதந்திர கட்சியுடன் இணையுமாறு விஜயதாசவுக்கு அழைப்பு

626 0

அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜயதாச ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விஜயதாச ராஜபக்ஸவுடன் தனக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment