ஹார்வே புயல் எதிரொலி: ஹூஸ்டனில் விமான நிலையங்கள் மூடப்பட்டன

569 0

அமெரிக்காவை தாக்கிய ஹார்வே புயலால் ஹூஸ்டன் நகரிலுள்ள இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை தாக்கிய ஹார்வே புயலால் ஹூஸ்டன் நகரிலுள்ள இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் வீசிய ஹார்வே புயலின் தாக்குதலால் டெக்காஸ் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஹூஸ்டன், விக்டோரியா, கார்பஸ் கிறிஸ்டி ஆகிய நகரங்களில் பாதிப்பு அடைந்தன.

பலத்த மழை காரணமாக ஹூஸ்டன் நகரத்தில்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நிரம்பி வழிந்த தண்ணீர் நகரத்துக்குள் புகுந்ததால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஹூஸ்டனில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விமான நிலைய செய்தி தொடர்பாளர்  கூறுகையில், ஹார்வே புயலால் ஹூஸ்டன் நகரம் முழுவதும்  வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இங்குள்ள ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையம் மற்றும் வில்லியம் ஹாபி விமான நிலையம் ஆகியவற்றின் ரன்வேக்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.

வெள்ள நிலைமை சீராகும் வரை இந்த விமான நிலையங்கள் மூடப்படும். அதன்பின்னரே விமான நிலையம் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a comment