வில்பத்து சரணாலய பகுதியில் தொடர்ச்சியான வறட்சி காரணமாக சரணாலயத்தில் நீர்நிலைகள் வற்றியுள்ளதாகவும் காடுகள் வறண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு தேவையான நீரினை பவுஸர்கள் மூலம் வழங்குவதற்கும் நீரை தேக்கி நிலையங்களை அமைப்பதற்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வில்பத்து சரணாலயத்தில் அதிக வறட்சி காரணமாக காட்டு யானைகள் கிராம பகுதிகளுக்கு வரும் நிலை அதிகரித்துள்ளதாகவும் அங்குள்ள பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அதிக வறட்சி காரணமாக வில்பத்து சரணாலயத்தை அண்மித்த சுற்றுலா தங்குமிடங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.