சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு கொண்டுவர சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென பாராளுமன்ற சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரச்சினை தொடர்பில் சட்டப் பிரச்சினைகள் பல உள்ளதாகவும் இன்று கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்த பிரச்சினைகளை தேவையான சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் இந்த பிரேரணை குறித்து சட்ட ஆலோசனை பெறவுள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளார்.