அமரர் சந்திரசேகரனின் கனவை நனவாக்கியது தமிழ் முற்போக்கு கூட்டணி

294 0

மறைந்த மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் நுவரெலியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக கன்ட கனவை இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நனவாக்கியிருக்கின்றது. 

இது கூட்டணியின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாகும் என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

1989 ஆம் ஆண்டு மே தினக் கூட்டத்தில் இதனை ஒரு பிரகடனமாக மலையக மக்கள் முன்னணி முன் மொழிந்துள்ளது. அதன் பின்பு பல்வேறு இடங்களிலும் மலையகத்திலும் இது தொடர்பான ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தியிருந்தது.

முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவிக் குழுவிலும் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அன்று பெரியசாமி சந்திரசேகரன் மாத்திரமே இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியான அலுத்தங்களை தனியாக கொடுத்து வந்தார்.
அதன் காரணமாக அது வெற்றி பெறாமல் போய்விட்டது.

ஆனால் இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி ஒற்றுமையாக அதாவது அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் மனோகணேசன், நான் மேலும் எங்களுடைய கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற மயில்வாகனம் திலகராஜ்,கண்டி வேலுகுமார் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டமை காரணமாக இந்த எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான விடயம் சாதகமான ஒரு நிலையை எட்டியுள்ளது.

மலையக அரசியல் வரலாற்றில் மலையக மக்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.
எத்தனை அபிவிருத்திகள் வந்தாலும் இந்த வெற்றி அவை ஈடாகாது என்று தெரிவித்தார்.

Leave a comment