வித்தியா வழக்கு இன்றைய தினம் ரயலட்பார் நீதிமன்றில் எதிரிகள் தரப்பு விளக்கம்

277 0

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பு சாட்சி நெறிப்படுத்தல்கள் நிறைவடைந்த நிலையில் இவ் வழக்கின் எதிரிகள் தரப்பு விளக்கமானது இன்றைய தினம் ரயலட்பார் நீதிமன்றில் இடம்பெறுகின்றது.

வித்யாவின் கூட்டு வன்புனர்வு படுகொலை வழக்கானது மேல்நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலமையில் யாழ் மேல்நீதிமன்றில் நீதாய விளக்கமுறையில் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையிலேயே இன்றையதினம் ரய்லட்பார் நீதாயவிளக்கம் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் இவ் வழக்கின் எதிரிகளனான ஒன்பது சந்தேக நபர்களும் சட்டத்தரணிகள் ஊடாக தங்கள் தரப்பு சாட்சிகளை வழங்கவுள்ளதோடு சந்துகநபர்களளின் வாக்குமூலங்களும் நீதிபதிகள் முன்னிலையில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

Leave a comment