கட்சி உறுப்புரிமையை நீக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
உறுப்புரிமை நீக்கப்படுவது குறித்து வெளியாகியிருந்த தகவல் ஒன்று தொடர்பில் வினவியபோது அவர் இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாரச்சி, ரோஹித்த அபேகுணவர்தன, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.