மூன்று சிறுமிகளை மோட்டார் வாகனத்தில் ஏற்றி சிலாபத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படும் 25 வயதான நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று அவரை ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், குளியாபிட்டிய பிரதேசத்திற்கு மேலதிக வகுப்பிற்கு வந்த 3 சிறுமிகளை இவ்வாறு மோட்டார் வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் குளியாபிட்டிய – பல்லேவெல பிரதேசத்தில் உந்துருளி திருத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை காலை மேலதிக வகுப்பிற்காக வந்த இந்த சிறுமிகளில் ஒருவர், தனக்கு வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறி வீட்டை விட்டு செல்ல வேண்டும் என ஏனைய சிறுமிகளிடம் தெரிவித்துள்ளார்.