சட்டவிரோத மரங்களை ஏற்றிவந்த லொறி விபத்தில் சிக்கியது

244 0

சட்டவிரோத மரங்களை ஏற்றி வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் இன்று அதிகாலை விழுந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

செங்கலடி மணலாறு பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கிரான் பகுதியினூடாக ஓட்டமாவடிக்கு கொண்டு வரும் வழியில் புலியாந்தகல் பகுதியில் வைத்து வாழைச்சேனை வனஇலகா அதிகாரிகள் கைது செய்வதற்காக துரத்தியுள்ளனர்

அதன் போது அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வேகமாக வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் விழுந்துள்ளது.

பத்து அடி தொடக்கம் பன்னிரண்டு அடி நீளம் கொண்ட முப்பதுக்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இப்பகுதியில் சட்டவிரோத மரம் வெட்டும் பணி இடம்பெறுவதால் வனஇலகா அதிகாரிகள் இப்பகுதியில் கடமையில் ஈடுபடுவதாகவும் வாழைச்சேனை வனஇலகா வட்டார அதிகாரி எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

Leave a comment