பூகோள மற்றும் வலயப் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும், கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு, இன்றும் (28), நாளையும் (29), கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இதில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 700 பேர் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது, பூகோள வன்முறை பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்புச் செயற்பாடுகள், நுண்ணறிவும் இணையவழி சவால், வியூகம் என்பன பற்றி கவனம் செலுத்தப்படவுள்ளது.
பாதுகாப்புப் படைகள் மற்றும் பணிக்குழு சிவில் உறவுகள், மாநில உறவுகள் மற்றும் அதன் பயங்கரவாத வன்முறைகள், கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்புக்கள், பிராந்திய அமைப்புக்களின் பங்களிப்புக்கள், உலகளாவிய ஆளுகையில் செல்வாக்கு, உள்ளிட்டவைகள் ஆராயப்படும்
அத்துடன், சட்டப் பாதிப்புக்கள், ஐக்கிய நாடுகள் மூலோபாயம், உள் பாதுகாப்பு மூலோபாய ஆய்வுகள், உலக நிர்வாகத்தில் இராணுவச் செயற்பாடுகள் ஆகிய தலைப்புக்களில் கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.