ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

252 0

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற சங்கத்தின் மாதாந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் ஏளனம் செய்யும் வகையில் அண்மையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யு ஆர் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment