கட்டுநாயக்க சர்வதேச வானுர்தித் தளத்தில் சேவையில் இருந்த அதிகாரி ஒருவரின் கையடக்க தொலைபேசிகளை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்தியர்கள் மூவர் உடனடியாக நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
சுங்கவரித் திணைக்களத்தினால் இவர்கள் நேற்றைய தினம் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்தியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கன் வானுர்தி சேவை ஊடாக சென்னையில் இருந்து இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் கையடக்க தொலைபேசிகளை திருடிக்கொண்டு சுங்கவரி பிரிவிற்குள் நுழைந்து சென்றதன் பின்னர், சிசிடிவி காட்சிகள் மூலம் அவர்கள் திருடியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த இந்தியர்களை நேற்றைய தினம் நாடுகடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.