சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்காகவே புதிய வரி – ஜேவிபி

220 0

சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்காகவே அரசாங்கம் புதிய வரி திருத்த சட்டமூலத்தை கொண்டுவர முயற்சிப்பதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்தார்.

புதிய வரி சீர்த்திருத்த சட்டத்தின் மூலம் சாதாரண மக்களிடம் இருந்து நேரடி வரியை சேகரிப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

இதன் மூலம் மக்களிடம் இருந்து நேரடியாகவும், வருமானத்திற்கு  ஏற்பவும் வரி அறவிடப்படும்.

தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டு நிதியிலேயே ஆட்சியை நடத்துகின்றமையினாலேயே அவர்களின் தேவைக்கு ஏற்றவகையிலான திருத்தங்களை கொண்டுவருவதாக டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment