ராமேஸ்வரத்திலிருந்து கடத்தயிருந்த 140 கிலோ கஞ்சா பறிமுதல்

230 0

ராமேஸ்வரம் கடற்கரை இலங்கைக்கு அருகாமையில் இருப்பதால் இந்த பகுதியில் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

இதனை தடுப்பதற்கு தமிழக கடலோர காவல்படையினர் பல்வேறு நடைவடிக்கை எடுத்துவரும் நிலையில் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் தனுஸ்கோடி அடுத்துள்ள கம்பிப்பாடு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தவிருப்பதாக தனுஸ்கோடி பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலயடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தேடுதல் வேட்டையின் போது மணலில் பதுக்கிவைத்திருந்த சுமார் 140 கிலோ கஞ்சாவை நேற்று (25) மாலை பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவை கடத்த முயற்ச்சி செய்தவர் யார் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் இதனுடையை சர்வதேச மதிப்பு சுமார் 1.40 கோடி ரூபா மதிப்பு என பொலிசார் தெரிவித்தனர்.

Leave a comment