வெள்ளை மாளிகை ஆலோசகர் செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா

214 0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெள்ளை மாளிகையின் ஆலோசகரான செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆட்சி மீது அந்நாட்டு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்வது வழக்கமாகி வருகிறது. அமெரிக்காவின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக இருந்த மைக் டுப்க், அதிபர் டிரம்ப் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடந்த மே மாதத்தில் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அதிகாரியாக இருந்த சீன் ஸ்பைசர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் ஆலோசகராக, கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட செபாஸ்டியன் கோர்கா நேற்று ராஜினாமா செய்தார். அவர், கடந்த ஏப்ரல் மாதமே ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். அப்போது அதிபர் டிரம்ப் மற்றும் தலைமை உத்தியியலாளர் ஸ்டீவ் பேனான் ஆகியோர் கேட்டுக்கொண்டதை அடுத்து ராஜினாமா செய்யாமல் பணியை தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த வாரம் ஸ்டீவ் பேனான் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த ஒரு வாரத்திற்குள் செபாஸ்டியன் கோர்காவும் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment