முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் செல்கிறார்.

228 0
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்திற்கு செல்கிறார்.
தமிழக அரசின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் மாவட்டத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவுக்கான இடம் தேர்வு குறித்து மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் சேலம் போஸ் மைதானம், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி வளாகம், சோனா கல்லூரி வளாகம், கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்திற்கு செல்கிறார்.

Leave a comment