ஓய்வு பெற்றார் மைக்கேல் பெல்ப்ஸ்

370 0

phelpsஒலிம்பிக் போட்டிகளில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர் என்ற பெருமையை பெற்ற அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் 4தர 100 மீட்டர் மெட்லி நீச்சல் போட்டியில் அவர் தங்கம் வென்றார்.
அதன் பின்னர் அவர் தமது ஓய்வை அறிவித்தார்.
31 வயதான மைக்கேல் பெல்ப்ஸ் 2000ஆம் ஆண்டு, தனது 15வது வயதில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார்.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை பெற்ற அவர், ரியோ டி ஜெனீரோ நகரில் தற்போது இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மாத்திரம் 5 தங்கப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
நீச்சல் வீரராக உலகில் அதிக பதக்கங்களை வென்றவர் என்ற வரலாற்று பெருமையும் மைக்கேல் பெல்ப்ஸ் பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் மாத்திரம் 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் தங்க மகன் என்ற பட்டத்துடன் நீச்சல் போட்டியில் 39 உலக சாதனைகளையும் மைக்கேல் பெல்ப்ஸ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.