வானூர்தியை தகர்க்கப் போவதாக அச்சுறுத்திய இலங்கையருக்கு விளக்கமறியல்

213 0

அவுஸ்திரேலிய – மெல்போர்னிலிருந்து மலேஷியாவின் கோலாலம்பூருக்கு பயணித்த வானூர்தியை தகர்க்கப் போவதாக அச்சுறுத்திய இலங்கையரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மெல்போர்ன் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

25 வயதான மனோத் மாக்ஸ் என்ற அந்த இலங்கையர் கடந்த மே 31 ஆம் திகதி 128 பயணிகளுடன் பயணித்த வானூர்தியை நடுவானில் வைத்து தகர்க்கப்போவதாக அச்சுறுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி வானூர்தியின் பாதுகாப்புக்கு அச்றுத்தலாக இருந்நதமை மற்றும் அதில் பயணித்தவர்களுக்கு காயம் அல்லது உயிர் அச்சுறுத்தலை விடுத்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த இலங்கையர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாலும்,தமது பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டிருப்பதாலும், காணொளி இணைப்பினூடாக மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எனினும், அவர் பிணை மனு எதனையும் சமர்ப்பிக்கவில்லை.

இந்த நிலையில், அவரை எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மெல்போர்ன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இளைஞர் மாணவர் விஸா அனுமதியின்கீழ் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment