நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கீதா குமாரசிங்கவுக்கு மாத்திரமே இரட்டைக் குடியுரிமை உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தம்மிடம் கூறினாரென பெப்பரல் அமைப்பின் நிறைவேற்று பணி;ப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை தொடர்பில் கடந்த காலத்தில் பேசப்பட்டதையடுத்து, அது குறித்து குடிவரவு மற்றும் குடியகழ்வு கட்டுப்பாட்டாளரிடம் தாம் வினவியதாக அவர் கூறியுள்ளார்.
தகவலறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில், விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த குடிவரவு மற்றும் குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் இதனை உறுதிப்படுத்தியதாக ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.