போதைப்பொருட்களை நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு பிரிவின் தலைமை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பில் சட்டம் கடுமைப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், சில பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் இதன்போது பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதி, போதைப்பொருள் தொடர்பில் மேலும் சட்டத்தை கடுமைப்படுத்தவுள்ளதுடன், அதனை கட்டுப்படுத்த வெளிநாடுகளின் உதவிகளும் பெறப்படும் எனவும் தெரிவித்தாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்தவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.